RTI ONLINE APPLICATION 2018 | கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை ஏப்ரல் 20-ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
RTI ONLINE APPLICATION 2018 | கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை ஏப்ரல் 20-ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் | கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ், நலிவடைந்தவர்களின் குழந்தைகளை சிறுபான்மை இல்லாத தனியார் பள்ளிகளில் சேர்ப்பதற்காக இலவச மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்காக அந்த பள்ளிகளில் 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும். அதற்கான கட்டணத்தை அரசே செலுத்தும். அவ்வாறு பள்ளிகளில் சேர அடுத்த மாதம் (ஏப்ரல்) 20-ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மே மாதம் 18-ந்தேதி கடைசிநாள் ஆகும். தங்கள் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க விரும்புவோர், ஆன்லைன் மூலம் ( www.dge.tn.gov.in ) விண்ணப்பிக்க வேண்டும். வட்டார வளமையங்கள், உதவி தொடக்க கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரி, முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட தகவலை தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment