திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Thursday, September 19, 2019

தீபாவளி சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு அக்டோபர் 23-ம் தேதி தொடங்கும்: அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

இந்த ஆண்டு அக்டோபர் 27-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பணி நிமித்தமாக சென்னையில் தங்கியுள்ள ஏராளமானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணப்படுவர். எனவே பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.

அந்தவகையில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியதாவது:-

மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திட்டமிட்டபடி ஆந்திரா செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். கிழக்கு கடற்கரை சாலை மார்க்கமாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் செல்லும் பேருந்துகள், 

வேலூர், காஞ்சிபுரம், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், ஓசூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் பூவிருந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படவுள்ளன.

மதுரை, நெல்லை மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டப் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஊரப்பாக்கம் பேருந்து நிலையத்தில் புதிய பேருந்துநிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருவதால், அங்கு பேருந்து இயக்கப்படுமா என்பது குறித்து அடுத்தகட்ட ஆய்வுக் கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.

தீபாவளி பேருந்துகளுக்காக ஆகஸ்ட் 23ம் தேதி முன்பதிவு தொடங்கிய நிலையில், தீபாவளி சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு அக்டோபர் மாதம் 23ம் தேதி தொடங்கும்.

அதேபோல, தமிழகத்தில் தொழில் நகரங்களான கோவை, திருப்பூர் மட்டுமல்லாமல், பெங்களுருவில் பணியாற்றும் தமிழர்களும் சொந்த ஊருக்குச் சென்று வர சிறப்புப் பேருந்துகள் இயக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அது குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு அதற்குண்டான முடிவுகள் எட்டப்படும்.

சொந்த ஊர் சென்ற பொதுமக்கள் பண்டிகை முடிந்து ஊர் திரும்பவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும், தீபாவளி பேருந்துகள் இயக்கப்படும் நேரத்தில் நகர்ப் பகுதிகளில் கனரக வாகனங்கள் இயக்கத் தடை விதிக்கப்படும் என்று அறிவித்தார்.

No comments:

Post a Comment