திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Monday, September 30, 2019

TNPSC - 2020 ஆம் ஆண்டு அட்டவணை, ஒரு மாதத்தில் வெளியிடப்படும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர்தேர்வாணையம் அறிவிப்பு.


போட்டி தேர்வுகளுக்கான ஆண்டு அட்டவணை, ஒரு மாதத்தில் வெளியிடப்படும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர்தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

தமிழ் கலாசாரம்

இதுதொடர்பாக, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன், செயலர் நந்தகுமார் அளித்த பேட்டி:அரசு பதவிகளுக்கான, 'குரூப் - 2, குரூப் - 2 ஏ' இரண்டுக்கும், ஒரே தேர்வு முறை அமலாக உள்ளது. முதல்நிலை தகுதி தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்ச்சி பெறுவோருக்கு, பிரதான தேர்வு நடத்தப்படும். முன்பிருந்த, பொதுத்தமிழ் அல்லது ஆங்கில விடைத்தாளுக்கு பதில், முதல் நிலை தேர்விலும், பிரதான தேர்விலும், தமிழ் மொழி திறனை அறிந்து கொள்ளும் வகையில், அதிக கேள்விகள் இடம் பெறும். தமிழ் கலாசாரம், பண்பாடு, திருக்குறள் போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

புதிய தேர்வு முறையால், தமிழ் தெரியாதவர்கள், இனி, போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியாது. ஏற்கனவே இருந்த, எட்டு பாடங்களுடன், தமிழ் கலாசாரம் மற்றும் தமிழக நிர்வாக முறை குறித்த, இரண்டு புதிய பாடங்களும், பிரதான தேர்வில் சேர்க்கப் பட்டுள்ளன.புதிய தேர்வு முறை, கிராமப்புற மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகளை ஏற்படுத்தும். மனப்பாட முறைக்கு பதில், புரிந்து படிப்பவர்களுக்கு ஊக்கத்தை தரும்.வல்லுனர் குழுகடந்த ஆண்டில், போட்டி தேர்வுகள் வழியாக, 17 ஆயிரத்து, 500 பேருக்கு, அரசு வேலை கிடைத்துள்ளது. தேர்வுகளில், தவறாக கேட்கப்படும் கேள்விகளுக்கு, வல்லுனர் குழு அமைத்து, ஆய்வு நடத்தி முடிவு எடுக்கப்படும். தேர்வுகளுக்கான ஆண்டு கால அட்டவணை, ஒரு மாதத்தில் வெளியிடப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment