மத்திய அரசின் ஆளுகைக்கு உட்பட்ட நவோதயா வித்யாலயா பள்ளியில் ஆறாம் வகுப்பிற்கான மாணவ சேர்க்கை முடிவடையும் தருவாயில், தற்போது கால நீட்டிப்புபு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் 1986ம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையின்படி, ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளி தொடங்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் 28 மாநிலங்களிலும், 7 யூனியன் பிரதேசங்களிலும் நவோதயா வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு உணவு, உறைவிட வசதி, சீருடை உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில், நவோதயா வித்யாலயா பள்ளியில் 2020-2021 ஆண்டிற்கான ஆறாம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்வு 11-1-2020 மற்றும் 11-4-2020 ஆகிய நாட்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த மாநிலங்களில் எப்போது தேர்வு நடைபெறும் என்பது குறித்த விபரங்கள் நவோதயா பள்ளியின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இம்மாதம் அதாவது செப்டம்பர் 15ம் தேதி நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது விண்ணப்பப்பதிவிற்கான கடைசி தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 30ம் தேதி விண்ணப்பப்பதிவுக்கான கடைசி நாளாகும்.
No comments:
Post a Comment