வடகிழக்கு பருவமழை தொடங்காத நிலையில் தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்துவருகிறது.
தமிழகத்தில் இன்று திருவள்ளூர், காஞ்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, வேலூர், ராமநாதபுரம், மற்றும் சிவகங்கை ஆகிய 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இன்று பகல் 11.30 மணியிலிருந்தே பல இடங்களில் மழை பெய்துவருகிறது. கோடம்பாக்கம், வேளச்சேரி, கிண்டி, தி.நகர், அடையாறு உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது.
சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக நல்ல பெய்துவருகிறது. திண்டிவணம், விருதுநகர் பகுதிகளில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சேலத்தின் ஓமலூர் பகுதியில் 6 செ.மீ மழை பெய்துள்ளது. மேட்டூர் பகுதியில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலும் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
தஞ்சையின் அதிராம்பட்டினம் பகுதியில் 3 செ.மீ மழையும், திருவாரூர் மாவட்டத்தின் முத்துப்பேட்டையிலும் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது. திருச்சியின் மணப்பாறை, திருவாரூர், தொழுதூர் மற்றும் லால்குடி பகுதியில் ஒரு செ.மீ மழை பதிவாகியுள்ளது.
No comments:
Post a Comment