திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Friday, September 27, 2019

சீருடை பணியாளர்கள் தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழகத்தில் ஃபயர்மென், கான்ஸ்டபிள் போன்ற சீருடை பணிக்கு நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இது பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.


தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் நடத்தியுள்ள இரண்டாம் நிலை பணிக்கான தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது. விண்ணப்பதாரர்கள் இதனை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி சீருடை காவலர் பணிக்கான தேர்வுகள் நடைபெற்றது. இந்த தேர்வை சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தியது. கிரேடு II போலீஸ் கான்ஸ்டபிள், ஜெயில் வார்டனர், ஃபயர்மேன் ஆகியவற்றில் காலியாக உள்ள பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்படுகிறது.

இதன் முடிவுகள் நேற்று 26 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது தேர்வு முடிவுகளை சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://tnusrbonline.org 
பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

சீருடை கான்ஸ்டபிள் பணிக்கான முடிவுகளை அந்தந்த மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பதாரர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மாவட்டத்தை பார்த்து, முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

நேரடியாக தேர்வு முடிவுகள் உள்ள பக்கத்துக்குச் செல்ல இங்கு க்ளிக் செய்யவும்.

No comments:

Post a Comment