டிக்கெட் எடுக்காமல் பயணித்த நபர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட தொகை குறித்து, சென்னை போக்குவரத்து கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
எளிய மக்களின் அன்றாடத் தேவைகளுக்காக, பேருந்து வசதிகளை அரசு செய்து தந்துள்ளது. இதற்காக டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டு, அதற்கான கட்டணம் அரசுக்கு வருவாய் சேர்க்கிறது.
ஆனால் சிலர் டிக்கெட் எடுக்காமல் சென்று, அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி வருகின்றனர். அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைத்து, உரிய அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
சமீப காலமாக அரசுப் பேருந்தில் டிக்கெட் எடுக்காமல் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் சென்னை போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், பயணிகள் டிக்கெட் எடுக்காமல் செல்வது மோட்டார் வாகனச் சட்டப்படி குற்றம் ஆகும். எனவே டிக்கெட் இன்றி பயணிப்பவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.500 வசூல் செய்யப்படுகிறது.
கடந்த மே, ஜூன், ஜூலை ஆகிய 3 மாதங்களில் மட்டும் டிக்கெட் எடுக்காமல் சென்ற 10,791 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து ரூ.16,80,850 அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.
வரும் காலங்களிலும் இதுபோன்ற நடவடிக்கை தொடரும். பயணிகள் யாரும் டிக்கெட் எடுக்காமல் செல்லக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment