இந்தாண்டு முதுநிலை இன்ஜினியரிங் படிப்புக்கான கலந்தாய்வு தற்போது முடிவடைந்துள்ளது. இதில் வெறும் 24% இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
தமிழகத்தில் பி.இ படிப்புக்கான மாணவர் சேர்க்கை குறைந்தது போல், முதுநிலை இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை குறைந்தது. மொத்தமுள்ள இடங்களில் வெறும் 24 சதவீதம் மட்டுமே நிரம்பியது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் டான்செட் தேர்வு அடிப்படையில் முதுநிலை இன்ஜினியரிங் படிப்புகுள், எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அந்தவகையில், இந்தாண்டுக்கான டான்செட் தேர்வு கடந்த ஜூன் மாதம் 22,23 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது.
டான்செட் தேர்வு முடிவுகள் ஜூலை 5ம் தேதி வெளியிடப்பட்டது. இதையடுத்து முதுநிலை இன்ஜினியரிங் படிப்புகள், எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு ஆகஸ்ட் 10ம் தேதி வரையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது.
தரவரிசைப்பட்டியல் வெளியான பின்பு 4 ஆயிரத்து 779 மாணவர்கள் முதுநிலை படிப்புக்கு விண்ணப்பித்திருந்தனர். இது தவிர கேட் 2019 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் 489 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
இந்த நிலையில்முதுநிலை இன்ஜினியரிங் படிப்புகள், எம்பிஏ, எம்சிஏ படிப்புக்கான கலந்தாய்வு நேற்று முடிவடைந்தது. கடந்த 4 நாட்களாக நடந்த கலந்தாய்வில் வெறும் 3 ஆயிரத்து 852 மாணவர்களுக்கு மட்டுமே சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரையில், 11 ஆயிரத்து 809 எம்இ, எம்பிஏ, எம்சிஏ இடங்கள் உள்ளது. இவற்றில் 2,198 இடங்கள் அரசு பொறியியல் கல்லூரிகளிலும், 1,567 இடங்கள் தனியார் கல்லூரிகளிலும் உள்ளது. மொத்தம் 15 ஆயிரத்து 574 இடங்களில், வெறும் 3 ஆயிரத்து 852 இடங்கள் மட்டுமே தற்போது நிரம்பியுள்ளது. ஒட்டு மொத்தமாக பார்த்தால், 24.7% மட்டுமே நிரம்பியுள்ளது.
No comments:
Post a Comment