திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Sunday, September 29, 2019

வேலைவாய்ப்பு செய்திகள் மூலம் பல்வேறு துறைகளுக்கான பணிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


நிதி நிறுவனம் : கனரா வங்கியின் துணை நிதி நிறுவனமான கேன்பின் ஹோம்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் மேலாளர், முதுநிலை மேலாளர் போன்ற பணிகளுக்கு மொத்தம் 25 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 35 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணிகள் உள்ளன. ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பை 60 சதவீத மதிப்பெண்களுடன் நிறைவு செய்தவர்கள் மேலாளர் பணிக்கும், முதுநிலை படிப்பை முடித்தவர்கள் முதுநிலை மேலாளர் பணிக்கும் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பணி அனுபவம் அவசியம். விருப்பம் உள்ளவர்கள், கட்டணம் செலுத்தி, இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 23-11-2017-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விரிவான விவரங்களை www.canfinhomes.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

கணினிநுட்ப மேம்பாட்டு நிறுவனம் : பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று ‘சென்டர் பார் டெவலப்மென்ட் பார் அட்வான்ஸ்டு கம்ப்யூட்டிங்’. கணினி மேம்பாட்டு வளர்ச்சி நிறுவனமான இதில் திட்ட மேலாளர், திட்டப் பொறியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு 49 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் உள்ளிட்ட பி.இ., பி.டெக் பட்டப்படிப்பு படித்தவர்கள், ஆடியாலஜி பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. இது பற்றிய விரிவான விவரங்களை https://cdac.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 6-12-2017-ந் தேதி.

அறிவியல் மையம் : அறிவியல் மற்றும் தொழிற்சாலைகள் ஆராய்ச்சி கவுன்சில் (சி.ஐ.எஸ்.ஆர்.) கீழ் செயல்படுகிறது. இந்திய பெட்ரோலிய மையம். தற்போது இந்த அறிவியல் மையத்தில் திட்ட உதவியாளர் (டிரைவர்) பணிக்கு 32 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், டிரைவிங் லைசென்சு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். சான்றிதழ் சரிபார்த்தல், டிரைவிங் திறனை சோதித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் தேவையான சான்றுகளுடன், இதற்கான நேரடி நேர்காணலில் பங்கேற்கலாம். 23-11-2017-ந் தேதி இதற்கான நேர்காணல் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடக்கிறது. இது பற்றிய விவரங்களை www.iip.res.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

குடும்ப நலத்துறை : மத்திய குடும்ப நலத்துறையின் கீழ் தொழுநோய் கல்வி- ஆராய்ச்சி மையம் செயல்படுகிறது. காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த மையத்தில் தற்போது ஸ்டாப் நர்ஸ், நர்சிங் அட்டன்ட், டிரைவர் உள்ளிட்ட பணிகளுக்கு 10 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் www.cltri.gov.in என்ற இணையதளத்தில் முழுமையான விவரங்களை பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 4-12-2017-ந் தேதியாகும்.

யூ.பி.எஸ்.சி. : மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யூ.பி.எஸ்.சி. மத்திய அரசு துறையில் உதவி அறிவியலாளர் மற்றும் ரேடியோ டயக்னாசிஸ் சிறப்பு அதிகாரி பணிக்கு 13 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணிகள் உள்ளன. எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்பு, ரேடியாலஜி, ரேடியோ டயக்னாசிஸ் முதுநிலை படிப்பு படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. விருப்பம் உள்ளவர்கள் www.upsconline.nic.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

காகித கழகம் : தமிழ்நாடு காகித கழக நிறுவனம் சுருக்கமாக டி.என்.பி.எல். என அழைக்கப்படுகிறது. ஜெனரல் மேனேஜர், டெபுடி ஜெனரல் மேனேஜர், அசிஸ்டன்ட் ஜெனரல் மேனேஜர், அசிஸ்டன்ட் ஜெனரல் மேனேஜர் போன்ற அதிகாரி பணிகளுக்கு 12 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். சட்டம், நிதி, விற்பனை, பேப்பர், ஆர் அண்ட் டி போன்ற பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. இது பற்றிய விரிவான விவரங்களை www.tnpl.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம். விருப்பமுள்ளவர்கள் கூடுதல் விவரங்களை அந்த இணையதளத்தில் பார்த்துவிட்டு 29-11-2017-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

ஐ.ஓ.சி.எல். : இந்தியன் ஆயில் கழக நிறுவனம் (ஐ.ஓ.சி.எல்.) தற்போது பல்வேறு மண்டல கிளைகளிலும் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்களை நிரப்பி வருகிறது. வடக்கு மண்டலத்தில் 470 பேரையும், கிழக்கு மண்டலத்தில் 381 பேரையும் தேர்வு செய்கிறார்கள். ஐ.டி.ஐ. படித்தவர்கள் இந்த பயிற்சிப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். கிழக்கு மண்டல பணிகளுக்கு 10-12-2017-ந் தேதிக்குள்ளும், வடக்கு மண்டல பணிகளுக்கு 26-11-2017-ந் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும். இவை பற்றிய விரிவான விவரங்களை www.iocl.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment