தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக பதவியேற்கும் நிகழ்வு, இன்று காலை ஐதராபாத்தில் நடைபெறுகிறது.
தமிழக பாஜக மாநிலத் தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜனை, தெலங்கானா மாநில ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்திருந்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருக்கும் குமரி ஆனந்தனின் மகள் தமிழிசை.
மருத்துவராக தனது வாழ்க்கையை ஆரம்பித்து, ஏழை, எளிய மக்களுக்கு சேவையாற்றி வந்தார். சிறு வயது முதலே அரசியலில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். கடவுள் நம்பிக்கையாலும், பாஜக சித்தாந்தத்தின் மீதான ஈர்ப்பாலும் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அக்கட்சியில் அடிப்படை உறுப்பினராக இருந்து, தென்சென்னை மாவட்ட மருத்துவ அணிச் செயலாளராக வளர்ந்தார். இதையடுத்து மாநில பொதுச் செயலாளர், மாநில துணைத் தலைவர், தேசியச் செயலாளர் என படிப்படியாக வளர்ந்து, மாநிலத் தலைவர் என்ற நிலைக்கு உயர்ந்தார்.
பல்வேறு விமர்சனங்களையும் மிக தைரியமாக எதிர்கொண்டார். சமூக வலைத்தளங்களில் பலமுறை கேலி செய்யப்பட்ட போதிலும், அதனை எளிதாக கடந்து சென்றார். தமிழக பாஜகவிற்காக ஓடி, ஓடி உழைத்தவருக்கு சற்றே ஓய்வு அளிக்கும் வகையில், தெலங்கானா மாநிலத்தில் ஆளுநராக அமர வைக்கப் பட்டுள்ளார்.
No comments:
Post a Comment