நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்து
வாழ்த்து தெரிவித்தார்.
ஆண்டுதோறும் செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராதா கிருஷ்ணன் நினைவாக, இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி நாடு முழுவதும் சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படும். அந்த வகையில் நடப்பாண்டிற்காக நல்லாசிரியர் விருதுகள், வரும் செப்டம்பர் 5ஆம் தேதி டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் வழங்கப்படுகிறது.
இதற்கான விழாவில் பங்கு பெற்று, விருது பெறும் ஆசிரியர்களை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசினார். இதுதொடர்பான புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
அதில், நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களுக்கு எனது வாழ்த்துகள். நல்ல ஆசிரியர்கள் சிறந்த வழிகாட்டிகள். அற்புதமான அறிவை வழங்கக் கூடியவர்கள். விருது பெறும் ஆசிரியர்களுடன் சிறிது நேரத்தை செலவிட முடிந்தது.
அப்போது இளம் மனதை மாற்றுவதற்கான அவர்களின் அனுபவங்களைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது என்று பதிவிட்டுள்ளார். 2019ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருது 46 பேருக்கு வழங்கப்பட உள்ளது.
அதில் தமிழகத்தில் இருந்து கோபிசெட்டிபாளையம் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் மன்சூர் அலி, பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வ கண்ணன் ஆகியோரும் அடங்குவர்.
No comments:
Post a Comment