தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜனை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது.
ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து தமிழக பா.ஜ.க. பொறுப்பில் இருந்து தமிழிசை விடுவிக்கப்பட்டுள்ளார். தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
தமிழிசை தெலங்கானா ஆளுநராகி உள்ள நிலையில், தமிழக பாஜகவிற்கு புதிய தலைவர் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. தெலுங்கானா உள்பட 4 மாநிலங்களுக்கு ஆளுநர்களை நியமனம் செய்து மத்திய அரசு இன்று உத்தரவிட்டது.
மத்திய அரசு சார்பில் இன்று வெளியான அறிக்கையில் கூறியுள்ளதாவது: தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழக பா.ஜ.க.தலைவர் தமிழிசை சவுந்திரராஜனை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது.
கேரள ஆளுநராக ஆரிஃப் முகமது கானை மத்திய அரசு நியமித்துள்ளது. ஆரிஃப் கான் முன்னாள் மத்திய அமைச்சராக இருந்துள்ளார். இமாச்சலப் பிரதேச ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவை மத்திய அரசு நியமித்துள்ளது. மாராட்டிய மாநில ஆளுநராக பகத்சிங் கோஷாரியை மத்திய அரசு நியமித்துள்ளது.
தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் நியமிக்கப்பட்ட பின் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். கவர்னராக நியமிக்கப்பட்டது தொடர்பாக தமிழிசை அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
கவர்னர் நியமனம் மகிழ்ச்சி அளிக்கிறது. கடுமையான உழைப்பிற்கு பா.ஜ., அங்கீகாரம் தரும் என்பதை பிரதமர் மோடியும், பா.ஜ., தலைவர் அமித்ஷாவும் நிரூபித்துள்ளனர். எனக்கு ஆதரவு அளித்த தமிழக அரசியல் தலைவர்கள், குடும்பத்தினருக்கு ஆதரவு தெரிவித்து கொள்கிறேன். பா.ஜ., தலைவராக இருந்த எனக்கு அதை விட மிகப்பெரிய பதவியை கட்சி தலைமை கொடுத்துள்ளது. தமிழக பா.ஜ., தலைவராக எனது பதவிக்காலம், டிசம்பர் மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment