திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Monday, September 2, 2019

தமிழக அரசு சார்பில் உணவு, உறைவிடம் வழங்கி இலவச IAS/IPS பயிற்சி ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்கு படிப்பவர்களுக்கு தமிழக அரசு சார்பில் உணவு, உறைவிடம் வழங்கி இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இது பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.

தமிழக அரசு சார்பில் உணவு, உறைவிடம் வழங்கி இலவச IAS/IPS பயிற்சி

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்கு படிப்பவர்களுக்கு தமிழக அரசு சார்பில் உணவு, உறைவிடம் வழங்கி இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இது பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.


தமிழக அரசு சார்பில் உணவு, உறைவிடம் வழங்கி இலவச IAS/IPS பயிற்சி

இந்திய குடிமைப்பணிகளுக்கான தேர்வு அடுத்த வருடம் மே 31ம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், தற்போது அதில் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்கு படிப்பவர்களுக்காக தமிழக அரசு சார்பில் ஆறு மாத காலம் இலவச பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த பயிற்சி காலங்களில் உணவும், உறைவிடமும் வழங்கப்படுகிறது. 

2020ம் ஆண்டில் மத்திய தேர்வாணைக்குழு (UPSC) நடத்ம் குடிமைப் பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வு (Preliminary Examination – 2020) எழுதுவதற்கு, அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற ஆர்வமிக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களிடமிருந்து இணையதள வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


கூடுதல் விவரங்களை இப்பயிற்சி மைய இணையதளத்தில்www.civilservicecoaching.com வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கை மூலம் அறிந்து கொள்ளலாம். இப்பயிற்சி மையத்தில் முதல் நிலைத் தேர்வுக்கு ஏற்கனவே முழு நேர பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். அதற்கு விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது. 

முக்கிய நாட்கள்:


  • இணையதள வழி விண்ணப்பிக்கதொடங்கும் நாள் மற்றும் நேரம்: 30.08.3019 (முற்பகல் 10.00 மணி)
  • இணையதள வழி விண்ணப்பங்கள் சமர்ப்பிப்தற்கான கடைசி நாள் மற்றும் நேரம்: 10.09.2019 (மாலை 6.00 மணி வரை)
  • தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் (கொள்குறி வகை): 13.10.2019 (ஞாயிற்றுக்கிழமை)முற்பகல் 10.30 மணி முதல் 12..30 மணி வரை)

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆறு மாதம் உணவு, உறைவிடம் வழங்கப்படுகிறது. முழு நேர முயற்சியுடன் தேர்வுக்கு பயிற்சி மேற்கொண்டால், முதல்நிலைத் தேர்வில் எளிதாக வெற்றி பெறலாம். இது தொடர்பான முழுமையான விபரங்களுக்கு தமிழக அரசின் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்: 
http://www.civilservicecoaching.com/Notification_English_280819.pdf 

No comments:

Post a Comment