அங்கீகாரம் இல்லாத பள்ளிகளின் மாணவர்கள், பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்' என, அரசு தேர்வுத்துறை அறிவித்து உள்ளது.
தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, அரசு தேர்வுத்துறை வழியாக, பொது தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கு, அங்கீகாரம் உள்ள பள்ளிகளின் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுகின்றனர்.இது குறித்து, தேர்வு துறை இயக்குனர், உஷாராணி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் புதுச்சேரி கல்வி துறை இணை இயக்குனர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 1 பொது தேர்வு எழுத, அங்கீகாரம் பெற்ற பள்ளிகளின் மாணவர் விபரங்களை, அதற்கான படிவத்தில் நிரப்பி, வரும், 30ம் தேதிக்குள், dgef3sec@gmail.com என்ற, இ -- மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.தங்கள் மாவட்டத்தில் அங்கீகாரம் பெறாத பள்ளிகள் இருந்தால், அவற்றுக்கு அங்கீகாரம் பெற, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அங்கீகாரம் பெறாத பள்ளிகளின் மாணவர்கள், பிளஸ் 1 பொது தேர்வை எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதை பள்ளிகளுக்கு சுற்றறிக்கையாக தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment