வரும் 2019-20 கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்த காலஅட்டவணையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
நீட், ஜே.இ.இ, எம்.பி.ஏ என முக்கிய தேர்வுகளுக்கான கால அட்டவணையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இதில் மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வுக்கு வரும் டிசம்பர் மாதம் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய தேர்வு முகமையின் கால அட்டவணைப்படி, நாடு முழுவதும் அடுத்த ஆண்டு மே 3ம் தேதி நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இதன் முடிவுகள் ஒரு மாதத்திற்குப் பிறகு, அதாவது ஜூன் 4ம் தேதி வெளியிடப்படுகிறது. இந்த தேர்வுக்கு வரும் டிசம்பர் மாதம் 2ம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். டிசம்பர் 31ம் தேதி வரையில், விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தேர்வுகள் | விண்ணப்பிக்கும் நாள் | தேர்வு நடைபெறும் நாள் |
UGC-NET- December 2019 | 9 செப்டம்பர் 2019 | 2-6 டிசம்பரம் 2019 |
UGC-NET- June 2020 | 16 மார்ச் 2020 | 15-20 ஜூன் 2020 |
JEE (Main) 1 | 2 செப்டம்பர் 2019 | 6-11 ஜனவரி 2020 |
JEE (Main) 2 | 7 பிப்ரவரி 2020 | 3-9 ஏப்ரல் 2020 |
NEET UG-2020 | 2 டிசம்பர் 2019 | 3 மே 2020 |
இதே போல், ஜே.இ.இ தேர்வுகள் 2020 ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடைபெறுகிறது. இதற்கு வரும் செப்டம்பர் மாதம் விண்ணப்பிக்க வேண்டும். யூஜிசி தேர்வுகள் வரும் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. இந்த தேர்வு எழுதுவதற்கு தகுதியுடையவர்கள், நவம்பர் மாதத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
No comments:
Post a Comment