திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Thursday, January 31, 2019

இன்ஜி., தேர்வுக்கு சலுகை வழங்க அண்ணா பல்கலை ஒப்புதல்

சென்னை, -இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்களுக்கு, அரியர் தேர்வு முறையில், சலுகை வழங்கும் முடிவுக்கு, அண்ணா பல்கலையின் கல்வி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
    அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள இன்ஜி., கல்லுாரிகளில், 2017ல் புதிய தேர்வு முறை அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி, தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு, ஒரு ஆண்டு இடைவெளிக்கு பின், மீண்டும் தேர்வு எழுத முடியும் என, அறிவிக்கப்பட்டது.இதற்கு, ஒரு தரப்பு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். புதிய தேர்வு முறையால், படிப்பை முடிக்க, ஓராண்டு வரை கூடுதல் காலம் தேவைப்படுவதாக, மாணவர்கள் கூறினர். இதுகுறித்து, சில வாரங்களுக்கு முன், அண்ணா பல்கலை முன் ஆர்பாட்டம் நடத்தினர்.

     இதுகுறித்து, &'கல்வியாளர்கள் குழு அமைத்து முடிவு செய்யப்படும்&' என, பல்கலையின் பொறுப்பு பதிவாளர், குமார் தெரிவித்திருந்தார். &'மாணவர்களின் நியாயமான கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்&' என, பல்கலை துணைவேந்தர், சுரப்பா அறிவித்தார்.இதையடுத்து, தற்போது படிக்கும் மாணவர்களுக்கு மட்டும், சலுகை வழங்கப்பட உள்ளது. 

    அதாவது, அடுத்து வரும் நான்கு பருவ தேர்வுகளுக்கு, ஏதாவது ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாவிட்டால், அடுத்தடுத்த பருவ தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறலாம்.இதற்கு, அண்ணா பல்கலையில், கல்வி வாரியம் மற்றும் கல்வி கவுன்சில் ஆகியவற்றில், ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அடுத்து, சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் பெற்றதும் அமலுக்கு வரும்.

மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு 2 மதிப்பெண்கள் அளிக்கும் முறை - அடுத்த கல்வியாண்டில் அறிமுகம் என செங்கோட்டையன் தகவல்


   மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடத்துக்கும் 2 மதிப்பெண்கள் அளிக்கும் முறை வரும் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்த உள்ளதாகத் தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

   சென்னை தேனாம்பேட்டையில் ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் செங்கோட்டையன், நாடு முழுவதும் பொறியியல் படிப்புப் படித்த 80 இலட்சம் பேர் வேலையில்லாமல் உள்ளதாகவும், தமிழகத்தில் ஒரு இலட்சத்து 68ஆயிரம் பேர் பொறியியல் படிப்பு முடித்துவிட்டு வேலையில்லாமல் உள்ளதாகவும் தெரிவித்தார்.


   மரம் வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில், மரம் வளர்க்கும் மாணவருக்கு ஒரு பாடத்துக்கு 2 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 12 மதிப்பெண்கள் வழங்கும் முறையை அடுத்த கல்வியாண்டில் அறிமுகப்படுத்த உள்ளதாகவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Wednesday, January 30, 2019

CBSE Class 10, 12 admit cards for regular, private students released @cbse.nic.in

Apart from this, examination centres will also be able to download centre material for the candidates appearing from their centre.

he Central Board of Secondary Education (CBSE) has released an official notification for schools to download admit cards for class 10 and 12 exams on its official website, cbse.nic.in. CBSE affiliated schools will now be able to download the admit card by logging-in with their registered id. The students who will be appearing for board exams 2019 will get their admit cards or hall tickets from their respective schools.
Apart from this, examination centres will also be able to download centre material for the candidates appearing from their centre.
As per the CBSE notification, "No candidate will be allowed to enter the exam hall without a valid admit card or post 10 am."

Here is what students need to check in CBSE class 10, class 12 admit card:

  • Roll number
  • Date of birth
  • Name of exam
  • Candidate name
  • Mother and father's name/guardian's name
  • Name of exam centre
  • Category of PwD
  • Exemptions provided
  • Admit card ID
  • List of subjects appearing for

Take a look at some important instructions!

1. No candidates will be allowed to enter the exam centre after 10 am.
2. Candidates should appear for the exam in school uniform and with school identity card along with the identity card issued by the school.
3. Candidates are not allowed to carry a mobile phone or any electronic items and all barred items to the exam centre.
4. Before appearing for the exam, candidates must read the amended rules for unfair practices.

Ariyalur Anganwadi Recruitment 2019 – Apply Online

77 Anganwadi Worker Posts


      Ariyalur Anganwadi recruitment 2019 – Ariyalur Anganwadi recruiting 77 candidates to fill their Anganwadi Worker job in Ariyalur. Aspirants are requested to go through the latest Ariyalur Anganwadi job recruitment 2019 fully, Before applying to this job.  Ariyalur Anganwadi career is comes under the Government job. This is the best opportunity for the job hunters who are looking for the Career in Ariyalur Anganwadi. Ariyalur Anganwadi organization job applications are collected by offline mode only.

Ariyalur Anganwadi Worker Recruitment 2019

Ariyalur Anganwadi inviting the Anganwadi Worker job offline applications from 25.01.2019 to 12.02.2019. The interested and eligible candidates can able to apply for this job easily. Do not miss the wonderful career opportunity in Ariyalur Anganwadi. The detailed information on Ariyalur Anganwadi latest job notification 2019 has been given below. The job hunters are requested to read below the Ariyalur Anganwadi job selection process, eligibility, salary, age limit and applications fee in our Tamilan Jobs website. Aspirants stay tuned in this page for upcoming changes in Ariyalur Anganwadi Worker job 2019. For more accurate information on this Ariyalur Anganwadi job notification, check their official website https://ariyalur.nic.in/.

Ariyalur Anganwadi Recruitment 2019 Notification Highlights

OrganizationAriyalur Anganwadi
Starting Date25.01.2019
Job typeTN Govt Jobs
Job LocationAriyalur
Vacancies77
Apply modeOffline (By Post)
Official Websitehttps://ariyalur.nic.in/
Last Date12.02.2019

Ariyalur Anganwadi Job Vacancy Details

Ariyalur Anganwadi has released the following vacancy details with their recent recruitment. They give huge surprise to the candidates. They invites 77 Candidates to fill their vacancies. You can check their job vacancy details by below.
Total Vacancies: 77

Ariyalur Anganwadi Recruitment 2019 Detailed Vacancies

Ariyalur Anganwadi requires following posts to fill their vacancies. Check the latest job vacancy details below Ariyalur Anganwadi 2019.
  1. Main Anganwadi Worker – 35 Posts
  2. Mini Anganwadi Worker – 04 Posts
  3. Anganwadi Helper – 38 Posts

Ariyalur Anganwadi 77 Anganwadi Worker Eligibility Details

As per the recent Ariyalur Anganwadi notification 2019, the eligibility details for the Anganwadi Worker job has given below. Its is very important to check you qualification for this opportunity. If you have less qualification, you may not able to apply for this career. Here below you can find age limit and educational qualification required for Ariyalur Worker job 2019.

Ariyalur Anganwadi Notification 2019 Educational Qualification

Candidates are requested to check their education qualification required for various Ariyalur Anganwadi job opportunities.
முதன்மை  அங்கன்வாடி மைய பணியாளர்
அங்கன்வாடி மைய பணியாளர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 31.12.2019 அன்று 25 வயதுமுடிந்த மற்றும் 35 வயது வயதிற்கு மிகாதவர்கள் விண்ணபிக்கலாம். விதவை மற்றும் ஆதரவற்ற விதவை 25 வயது முதல் 45 வயது வரை விண்ணபிக்கலாம். மாற்றுதிறனாளிகளுக்கு 25 வயது முதல் 38 வயது எனவும் வயது வரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
குறு  அங்கன்வாடி மைய பணியாளர்
குறு  அங்கன்வாடி மைய பணியாளர் பதவிக்கு  31.12.2019 அன்று 25 வயதுமுடிந்த மற்றும் 35 வயது வயதிற்கு மிகாதவர்கள் விண்ணபிக்கலாம். விதவை மற்றும் ஆதரவற்ற விதவை 25 வயது முதல் 45 வயது வரை விண்ணபிக்கலாம். மாற்றுதிறனாளிகளுக்கு 25 வயது முதல் 38 வயது எனவும் வயது வரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
அங்கன்வாடி உதவியாளர்
அங்கண் மைய உதவியாளர் பதவிக்கு எழுதபடிக்க தெரித்தால் மட்டும் போதுமானது. 31.12.2018 20 வயது முடியுற்ற 40 மிகாதவ்ர்கள். அதிகபட்ச வயதான 40 வயதிலிருந்து 5 வருடம் கணவனை இழந்தவர்கள் ஆதரவற்ற விதவைகள் விண்ணபிக்கலாம்.

Ariyalur Anganwadi Worker Age limit

To apply Ariyalur Anganwadi job, the candidates required to attain following age limit. The notified aged candidates only can able to apply for the job vacancy. check the age limit details below.
For more reference kindly check the Ariyalur Anganwadi official notification 2019.

Ariyalur Anganwadi Application fees, Exam fees, Salary & Selection Process

Application Fees – Nil

As per the latest Ariyalur Anganwadi Notification 2019, there is no application fees to apply this 77 Anganwadi Worker job vacancy. So The candidates go for another step.

Salary details

Ariyalur Anganwadi 77 Anganwadi Worker Job salary details has been given below. The candidates can check various salary information below.
  1. Main Anganwadi Worker – Rs. 2,500 – 5,000/­ with Grade Pay Rs.500/-
  2. Mini Anganwadi Worker – Rs. 1,800 – 3,300/­ with Grade Pay Rs.500/-
  3. Anganwadi Helper – Rs. 1,300 – 3,000/­ with Grade Pay Rs. 300/-

Selection Process

Ariyalur Anganwadi may follow the following process to select the candidates. For Accurate information check the official website.
  1. Written exam
  2. Personal Interview
  3. Document Verification

How to apply for Ariyalur Anganwadi  Recruitment for Anganwadi Worker Job?

Step 1: Visit Ariyalur Anganwadi official website – https://ariyalur.nic.in/
Step 2: Search for Anganwadi Worker notification link in careers/ Advertisements/ News page.
Step 3: Download and view the official notification in their official website itself.
Step 4: Check and verify your eligibility to Ariyalur Anganwadi Recruitment 2019. If you are not eligible for the job notification, ignore and leave space for others.
Step 5: Take printout the application form or Print your CV.
Step 6: Fill all the details required by Ariyalur Anganwadi
Step 7: Attach all the necessary documents and attest by self signature the same
Step 8: Duly sign the application form and cover it.
Step 9: All the documents should be addressed to “Address Mentioned in Official Notification” by post so as to reach to the notified Ariyalur Anganwadi address on or before 12.02.2019. Envelope must be superscribed with “APPLICATION FOR THE POST OF “…………….”.

Address to send the application form

Ariyalur Anganwadi Important dates for Anganwadi Worker Vacancies

The following important dates need to be remembered by the Ariyalur Anganwadi candidates.
Starting Date25.01.2019
Last Date12.02.2019

Download Ariyalur Anganwadi official Notification 2019 and Online Apply

Ariyalur Anganwadi Notification 2019: click here!

Sunday, January 27, 2019

தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் பணி தீவிரம்! இன்றும் விண்ணப்பிக்கலாம்!


தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்குப் பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

 இதனால் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலகங்களும் ஞாயிற்றுக்கிழமை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



  பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள்,  ஆசிரியர்கள் கடந்த 22-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

  மாணவர்களின் நலன் கருதி ஜன.25-ஆம் தேதிக்குள் ஆசிரியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என உயர்நீதிமன்றமும்,  தமிழக அரசும் விடுத்த வேண்டுகோள் பலனளிக்கவில்லை. 

   இதையடுத்து கொடுக்கப்பட்ட அவகாசம் முடிவடைந்ததால் தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்தபடி அனைத்து மாவட்டங்களிலும் அரசுப் பள்ளிகளுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்யும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

 தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்ததைத் தொடர்ந்து கல்வித்துறை அலுவலகங்களில்  ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், முதுநிலைப் பட்டதாரிகள் என ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்து வருகின்றனர்.

    இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியது: பணிக்கு வராத 1.50 லட்சம் ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது.  அதே நேரத்தில் அவர்களுக்குப் பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமித்து வருகிறோம். 

  இதற்காக வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல்  மாவட்ட கல்வி அலுவலகங்கள், முதன்மைக் கல்வி அலுவலகங்கள்,  வட்டார கல்வி அலுவலகங்கள் மற்றும்  உயர்நிலை,  மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன.  தமிழகம் முழுவதும் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது.

   இன்றும் விண்ணப்பிக்கலாம்:  இதைத் தொடர்ந்து தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக  அனைத்து மாவட்டங்களிலும் கல்வித்துறை அலுவலகங்கள்,  உயர்நிலை- மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக அலுவலகங்கள் ஞாயிற்றுக்கிழமை செயல்படும்.  இதனால் இதுவரை விண்ணப்பிக்காதவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

      விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களின் விவரங்களுடன்  அருகில் உள்ள அரசு உயர்நிலை,  மேல்நிலைப் பள்ளிகளின் பெற்றோர் - ஆசிரியர் கழக நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்களை அணுகலாம். 

       அவர்களை அணுக முடியாவிட்டால், முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர்,  உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் அனைவருக்கும் கல்வி, ஒருங்கிணைந்த கல்வி இயக்கக திட்ட அலுவலர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். 

       மேலும், பள்ளி கல்வித் துறையின், 14417 என்ற உதவி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.  புதிதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் திங்கள்கிழமை காலை 9 மணிக்கு பணியில் சேர வேண்டும்  என அவர்கள் தெரிவித்தனர்.


420 ஆசிரியர்கள் இடைநீக்கம்

       ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டு கைதான 420 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டு பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று  மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்  கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டிருந்தார்.

   இந்தநிலையில் சனிக்கிழமை இரவு 10 மணி வரை  அனைத்து மாவட்டங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களில்  420 பேர்  பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
  இதற்கான உத்தரவை அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் பிறப்பித்துள்ளனர்.

Friday, January 25, 2019

TNPSC RECRUITMENT Curator in Museum

புதிய ஆசிரியர்கள் நியமனம் தடுப்பவர்கள் மீது புகார் அளிக்க உத்தரவு

சென்னை: அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும், 7,500 ரூபாய் சம்பளத்தில், புதிதாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
           அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, &'ஜாக்டோ - ஜியோ&' சார்பில், 22ம் தேதி முதல், வேலை நிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது. இந்தப் போராட்டத்தில், ஆசிரியர் சங்கங்களில் சில பிரிவினர் பங்கேற்றுள்ளனர். அதனால், தொடக்கப் பள்ளிகள் பெருமளவில் பாதிக்கப் பட்டுள்ளன. எனவே, மாதம், 7,500 ரூபாய் சம்பளத்தில், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பாதிப்பு

     இது தொடர்பாக, பள்ளி கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்து உள்ள உத்தரவு: ஆசிரியர்கள் போராட்டத்தால், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் செயல்பாடு பாதிக்கப் பட்டுள்ளது. பொதுதேர்வு மாணவர்களுக்கு, செய்முறைத் தேர்வை, உடனே துவங்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, மாணவர்கள் நலன் கருதி, பள்ளிகளை திறந்து பாடம் நடத்த, தகுதியான ஆசிரியர்களை தற்காலிகமாக நியமிக்க, தொடக்க கல்வி இயக்குனர் அறிக்கை அளித்து உள்ளார்.

         எனவே, பள்ளிகளின் பெற்றோர் - ஆசிரியர் கழகம் சார்பில், தற்காலிக ஆசிரியர்களை, மாதம், 7,500 ரூபாய் சம்பளத்தில், உடனடியாக நியமிக்க வேண்டும். ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியருக்கான, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், பி.எட்., மற்றும் முதுநிலை பட்டப் படிப்பு முடித்தவர்களை தேர்வு செய்யலாம். ஒவ்வொரு தொடக்கப் பள்ளிக்கும், குறைந்தது ஒரு தற்காலிக ஆசிரியரை நியமித்து, பள்ளிகளை இயக்க வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, தற்காலிக நியமனத்தை அதிகரித்து கொள்ளலாம்.

    போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள், உடனே பணிக்கு திரும்ப வேண்டும்&' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.எனவே, ஆசிரியர்கள் இன்று முதல் பணிக்கு வரா விட்டால், அவர்கள் மீது, நாளை முதல், முதன்மை கல்வி அதிகாரிகள் வாயிலாக, ஒழுங்கு நடவடிக்கை துவங்கும். 

வரும், 28 முதல், தற்காலிக ஆசிரியர்கள் 

          உதவியுடன், பள்ளிகள் தொடர்ந்து இயக்கப்பட வேண்டும். பள்ளி கல்வித் துறையின் நடவடிக் கைகளுக்கும், பணிக்கு வரும் ஆசிரியர்களுக் கும் யாராவது தொல்லை தந்தால், அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து, மாவட்ட கல்வி அதிகாரிகள், உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.ஆசிரியர்கள், &'ஸ்டிரைக்&'கில் ஈடுபட்ட நாட்களுக்கு சம்பளப் பிடித்தம் செய்து, அதன் விபரத்தை கருவூலத்துக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

நோட்டீஸ்

          வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது சட்ட விரோதம் என்பதால், வேலைக்கு வராத ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் படும்&' என, பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது; போராடும் ஆசிரியர் களுக்கு,&'நோட்டீஸ்&' அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை இயக்குனர், ராமேஸ்வர முருகன் பிறப்பித்துள்ள உத்தரவு:அரசு பணிகள் பாதிக்கும் வகையில், &'ஸ்டிரைக்&' போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவது, அரசு பணியாளர் நடத்தை விதிகளின் படி விதிமீறலாகும். 

    அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதை நியாயப்படுத்த முடியாது; அது சட்ட விரோதம்&' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. தற்போது, பள்ளிகளில் திருப்புதல் தேர்வு, செய்முறைத் தேர்வுக்கான பயிற்சிகள் துவங்கி இருக்க வேண்டும். ஆனால், ஆசிரியர்கள் போராட்டத்தால், இந்த பயிற்சிகள் பாதிக்கப் பட்டு உள்ளன. செய்முறைத் தேர்வுகள் நடக்காமல், பாடம் நடத்தப்படாமல், அரசு, அரசு உதவி பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். 

  அடிப்படை தொடக்க கல்வி மாணவர்கள் நிலை, இன்னும் மோசமாகும்.அதனால், அரசு பள்ளிகளின் நிலை மோசமாகி, எந்த பெற்றோரும், அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க மாட்டார்கள். இந்த நிலையை தடுக்க, ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்.வேலைக்கு வராத நாட்கள், அனுமதி பெறாத விடுமுறையாக கணக்கிடப்பட்டு, சம்பளம் மற்றும் இதர படிகள் வழங்கப்படாது. 

    அனுமதி பெறாமல், பணிக்கு வராத ஊழியர்களின் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். தற்காலிக விடுப்பு, மருத்துவ விடுப்பு உள்ளிட்ட, எந்த வகை விடுப்பும், போராட்ட காலத்தில் வழங்கப்படாது. மருத்துவ விடுப்பு கேட்டு, போலியான தகவல்களை அளிப்பது, மருத்துவ விடுப்பு ஆய்வுக் குழுவுக்கு தெரிய வந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது, குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

         இது குறித்து, முதன்மை கல்வி அதிகாரிகள், சம்பந்தப்பட்ட ஊழியர்களை பணிக்கு திரும்ப அறிவுறுத்தி, &'நோட்டீஸ்&' அனுப்ப வேண்டும். அதை மீறி, போராட்டத்தில் பங்கேற் றால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

குடியரசு தினத்தை புறக்கணிக்காதீங்க

 குடியரசு தினம், நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தொடக்க கல்வி இயக்குனர் கருப்பசாமி, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: குடியரசு தினத்தை, நாளை அனைத்து கல்வி அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் சிறப்பாக கொண்டாட வேண்டும். கொடிமரத்தை புனரமைத்து, சரிபார்க்க வேண்டும். 

     நாட்டிற்கு நல்ல குடிமக்களை உருவாக்கும் உன்னத பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், பள்ளிகளில் குடியரசு தின விழாவிற்கு ஏற்பாடு செய்து, அதில் பங்கேற்க வேண்டும். இதற்கு, முதன்மை கல்வி அதிகாரிகள் வலியுறுத்த வேண்டும்.

     மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தி பரிசு வழங்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும், வனத்துறை உதவியுடன் மரக்கன்றுகள் நட்டு, அவற்றை பராமரிக்க வேண்டும். அன்றைய தினம், நாட்டுப் பற்று, பண்பாடு மற்றும் கலாசாரத்தை விளக்கும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து, மாணவர்கள் வாயிலாக நடத்த வேண்டும். இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து, தலைமை ஆசிரியர் களுக்கு, முதன்மை கல்வி அதிகாரிகள் தகவல் அனுப்பி, ஆசிரியர்களை குடியரசு தினம் கொண்டாட வரும்படி, அழைப்பு விடுத்துள்ளனர்.

டிஸ்மிஸ்

     பள்ளி கல்வி இயக்குனரகம் வெளியிட்ட எச்சரிக்கையில், &'பள்ளி கல்வித் துறையில், தற்காலிகமாக பணியாற்றுபவர்கள், போராட்டத்தில் பங்கேற்பது தெரிய வந்தால், அவர்கள் உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுவர்&' என, கூறப்பட்டுள்ளது.

வேலை நிறுத்தம் வாபசாகுமா

    ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம், நேற்று சென்னையில் நடந்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, ஒருங்கிணைப்பாளர், தாஸ் அளித்த பேட்டி: எங்களின் போராட்டத்துக்கு, உயர் நீதிமன்றம், எந்த தடையும் விதிக்கவில்லை. எனவே, எங்கள் போராட்டம் தொடரும்.

     மாவட்ட தலைநகரங்களில், இன்று மறியல் நடத்தப்படும். நாளை, ஜாக்டோ - ஜியோவின் உயர்மட்ட குழு கூட்டம், சென்னையில் நடக்கும். 28ம் தேதி முதல், போராட்டம் மறுவடிவம் பெறும்.இவ்வாறு, அவர் கூறினார்.

    போராட்டத்தை வாபஸ் பெறுவீர்களா&' என, நிருபர்கள் கேட்டனர். அதற்கு, &'&'வரும், 28ம் தேதி, மதுரை உயர் நீதிமன்ற கிளையில், ஜாக்டோ - ஜியோ தொடர்பான வழக்கு, விசாரணைக்கு வர உள்ளது. அப்போது, உரிய முடிவு எடுப்போம்,&'&' என, தாஸ் தெரிவித்தார். 

    இதற்கிடையே, ஜாக்டோ - ஜியோ போராட்டத்திற்கு ஆதரவாக, சென்னை, தலைமைச் செயலக ஊழியர்கள்,நேற்று மதியம், உணவு இடைவேளையின் போது, தலைமை செயலக சங்க முன்னாள் செயலர் வெங்கடேசன் தலைமையில், கோட்டை வளாகத்தில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Thursday, January 24, 2019

ஜிப்மர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்பு

புதுச்சேரி: ஜிப்மரில் பி மற்றும் சி பணியிடங்களுக்கு ஆன்-லைனில் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

 புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஜூனியர் இந்தி மொழிப்பெயர்ப்பாளர், நியூக்கிளியர் மெடிசன்டெக்னிக்கல் அசிஸ்டண்ட், யூராலஜி டெக்னிக்கல் அசிஸ்டண்ட், நர்சிங் ஆபிசர் உள்ளிட்ட பி பணியிடங்களும், ஸ்டெனோகிராபர்-2, எம்.டி.எஸ்., காப்ளர் உள்ளிட்ட சி பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் www.jipmer.puducherry.gov.in என்ற இணையதளத்தில் ஆன்-லைனில் வரவேற்கப்பட்டு வருகிறது. 

   ஆன்-லைனில் விண்ணப்பிக்க பிப்ரவரி 13ம் தேதி மாலை 4.30 மணி வரை சமர்பிக்க வேண்டும்.எவ்வளவு பணியிடங்கள்ஜூனியர் இந்தி மொழிப்பெயர்ப்பாளர்-3 பணியிடங்கள், நியூக்கிளியர் மெடிசன்டெக்னிக்கல் அசிஸ்டண்ட்-2 பணியிடங்கள், யூராலஜி டெக்னிக்கல் அசிஸ்டண்ட்-1, நர்சிங் ஆபிசர்- 60, ஸ்டெனோகிராபர்-3,எம்.டி.எஸ்., காப்ளர்-1 என மொத்தம் 70 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 

       பொது-40, ஓ.பி.சி.,-18, எஸ்.சி.,-3, எஸ்.சி.,-9 என இட ஒதுக்கீடு வாரியாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.பதவி வாரியாக பார்க்கும்போது, ஜூனியர் இந்தி மொழிப்பெயர்ப்பாளர்-பொது-2, ஓ.பி.சி.,-1,நியூக்கிளியர் மெடிசன்டெக்னிக்கல் அசிஸ்டண்ட் பொது-1, ஓ.பி.சி.,-1,யூராலஜி டெக்னிக்கல் அசிஸ்டண்ட் பொது-1, நர்சிங் ஆபிசர் பொது-34, ஓ.பி.சி.,-15, எஸ்.சி.,-2, எஸ்.டி..,-9,ஸ்டெனோகிராபர் பொது பிரிவு-1, ஓ.பி.சி.,-1, எஸ்.சி.,-1, எம்.டி.எஸ், காப்ளம் பொது-1 என தேர்வு செய்யப்பட உள்ளனர். 

மேலும் விபரங்களுக்கு www.jipmer.puducherry.gov.in அல்லது 
18002667072 

TNPSC RECRUITMENT ANNOUNCED Assistant System Engineer & Assistant System Analyst

Wednesday, January 23, 2019

எம்.பி.ஏ., படிப்பு

மத்திய மனிதவளத்துறை அமைச்சகத்தின் கீழ் மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் இயங்கி வரும் ‘அட்டல் பிஹாரி வாஜ்பாய் - இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி அண்ட் மேனேஜ்மெண்ட்’ (ஐ.ஐ.ஐ.டி.எம்.,) கல்வி நிறுவனத்தில் 2 ஆண்டுகள் மேலாண்மை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்புகள்:
* எம்.பி.ஏ., 
* எம்.பி.ஏ., - பிஸ்னஸ் அனாலிடிக்ஸ்

தகுதிகள்: இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பெற்றிருக்க வேண்டும். கேட், மேட் , சிமேட், ஜிமேட் போன்ற தேசிய தகுதி தேர்வுகளில் ஏதேனும் ஒன்றை எழுதியிருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இருந்து மாணவர்கள் இதற்கான விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தைப் பல்கலைக்கழக முகவரிக்கு அஞ்சல் வழியில் அனுப்பி வைக்க வேண்டும்.

தேர்வு முறை: டெல்லி, குவாலியர், கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஐதராபாத் மற்றும் மும்பை ஆகிய இடங்களில் இந்த படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: பிப்ரவரி 4

விபரங்களுக்கு: www.iiitm.ac.in

சென்னை பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி

சென்னை பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி மையத்தில் இளநிலை, முதுநிலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்புகள்:
* பி.ஏ., (தமிழ், தமிழ் இலக்கியம், ஆங்கிலம், எக்னாமிக்ஸ், ஹிஸ்டாரிக்கல் ஸ்டடீஸ், பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன், கிரிமினாலஜி அண்ட் போலீஸ் அட்மினிஸ்ட்ரேஷன்)
* பி.காம்., (கார்பரேட் செக்ரட்ரிஷிப், பேங்க் மேனேஜ்மெண்ட், கம்பியூட்டர் அப்ளிகேஷன்ஸ்)
* பி.பி.ஏ.,- பிஸ்னஸ் அட்மினிஸ்ட்ரேஷன்
* பி.சி.ஏ., கம்பியூட்டர் அப்ளிகேஷன்
* பி.எஸ்சி., (மேத்மெடிக்ஸ், சைக்காலஜி)
* எம்.ஏ., (தமிழ், ஆங்கிலம், எக்னாமிக்ஸ், ஹிஸ்டாரிக்கல் ஸ்டடீஸ், பொலிடிக்கல் சயின்ஸ், பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன், ஹூமன் ரைட்ஸ் அண்ட் டியூடீஸ் எஜூகேஷன்)
* எம்.காம்.,
* எம்.எஸ்சி., (மேத்மெடிக்ஸ், சைக்காலஜி, கவுன்சிலிங் சைக்காலஜி, சைபர் பாரன்சிக் அண்ட் இன்பர்மேஷன் செக்யூரிட்டி, இன்பர்மேஷன் டெக்னாலஜி)
* எம்.பி.ஏ., (பினான்ஸ் மேனேஜ்மெண்ட், ஹாஸ்பிட்டல் மேனேஜ்மெண்ட், ஹூமன் ரிசோர்ஸ் மேனேஜ்மெண்ட், மார்கெட்டிங் மேனேஜ்மெண்ட், லாஜிஸ்டிக்ஸ் அண்ட் சப்ளை செய்ன் மேனேஜ்மெண்ட், சிஸ்டம் மேனேஜ்மெண்ட்)
* எம்.சி.ஏ., டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகள்

தகுதிகள்:
ஒவ்வொரு நிலை படிப்புகளுக்கும் தனித் தனியே தகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆகையால் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் அந்தந்த படிப்புகளுக்கு தேவைப்படும் தகுதிகளை பல்கலைக்கழக வலைத்தளத்தில் பார்த்து தெளிவுபடுத்திக்கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை:
இதற்கான விண்ணப்பப் பதிவை சென்னை பல்கலையின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலமாகவோ அல்லது நேரடியாகப் பல்கலைக்கழகத்திலோ மேற்கொள்ளலாம்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: மார்ச் 31

விபரங்களுக்கு: www.ideunom.ac.in

பிற்பட்ட வகுப்பினருக்கான கல்விக் கடன்

பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் முழு நேர தொழிற்கல்வி/தொழில்நுட்பக் கல்வி பயில கல்விக் கடன் வழங்குகிறது.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் துறையின் கீழ் தேசிய பிற்பட்ட வகுப்பினர் பைனான்ஸ் அன்ட் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்படுகிறது.
இந்த நிறுவனம் ஆண்டுக்கு குடும்ப வருமானம் கிராமப்புற ஏரியாக்களில் ரூ.40 ஆயிரம்  வரை மற்றும் நகர்ப்புற ஏரியாக்களில் ரூ.55 ஆயிரம் வரை உள்ள பிற்பத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு முழு நேர தொழிற்கல்வி அல்லது தொழில்நுட்பக் கல்வி பயில கடன்களை அளிக்கிறது.
பொறியியல், மருத்துவம், நிர்வாகம், ஐ.டி., சட்டம், நர்சிங், கம்ப்யூட்டர் போன்ற படிப்புகளை படிக்கும்  மாணவர்கள் இந்த கல்விக் கடன் பெற விண்ணப்பிக்கலாம். இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 10 லட்சமும், வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.20 லட்சமும கல்விக் கடனாக வழங்கப்படும்.கல்விக் கடனுக்கு ஆண்டிற்கு 4% வட்டி வசூலிக்கப்படும். மாணவியருக்கு 3.5% வட்டி வசூலிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு www.nbcfdc.org.in இணையதளத்தைப் பார்க்கவும்.

10ம் வகுப்பு மாணவர் விபரம் பிழை திருத்த அவகாசம்

        சென்னை, பத்தாம் வகுப்பு மாணவர் விபரங்களில் உள்ள பிழைகளை திருத்த, ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விபரங்களை, செப்டம்பரில் பள்ளிகளில் பதிவு செய்தனர். அதில், மாணவர்களின் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, பள்ளியின் பெயர் போன்ற விபரங்கள், இடம் பெற்றுள்ளன.

  இதில், சில மாணவர்களின் பெயர்களில், பிழைகள் உள்ளதை, தேர்வுத்துறை கண்டறிந்துள்ளது. எனவே, பத்தாம் வகுப்பு சான்றிதழில் பிழைகள் வராமல் தடுக்கும் வகையில், மாணவர் விபரங்களில் உள்ள பிழைகளை திருத்த, தேர்வுத்துறை அவகாசம் அளித்துள்ளது.இதற்கான வசதிகள், நேற்று ஆன்லைனில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பள்ளி ஆசிரியர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், வரும், 27க்குள் பிழைகளை திருத்த, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி அறிவுறுத்தியுள்ளார்.

கல்லுாரி கல்வி கட்டணம் நிர்ணயிக்க குழு

சென்னை, தனியார் கல்லுாரிகளுக்கு, கல்வி கட்டணம் நிர்ணயிக்க குழு நியமித்து, அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனுவுக்கு பதில் அளிக்கும்படி, உயர் கல்வித்துறை செயலர், பல்கலை மானிய குழுவுக்கு, &'நோட்டீஸ்&' அனுப்ப, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை காமராஜர் பல்கலையின், தனியார் கல்லுாரிகள் நிர்வாக சங்கத்தின் தலைவர், டாக்டர் இரா.லட்சுமிபதி தாக்கல் செய்த மனு:கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளை, யு.ஜி.சி., என்ற, பல்கலை மானிய குழு நேரடியாக கண்காணிக்கிறது. இந்த கல்லுாரிகளுக்கு, மாதிரி கட்டண அமைப்பை, இதுவரை, யு.ஜி.சி., வகுக்கவில்லை. கல்வி கட்டணம் நிர்ணயம் செய்வதற்கு, யு.ஜி.சி., கொள்கை வகுக்க வேண்டியுள்ளது.குழு முடிவுஇந்நிலையில், தனியார் கல்லுாரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் நடத்தப்படும், சுயநிதி வகுப்புகளுக்கு, கல்வி கட்டணம் நிர்ணயிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி, எஸ்.ஆர்.சிங்காரவேலு தலைமையில் குழு அமைத்து, ௨௦௧௮ ஆகஸ்டில், அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

கல்வி நிறுவனங்கள் உத்தேசித்துள்ள கட்டணத்தை, உரிய ஆவணங்களுடன், குழு முன் சமர்ப்பிக்க வேண்டும். உத்தேசித்துள்ள கட்டணம் நியாயமானதா என்பதை, குழு முடிவு செய்யும். கட்டணத்தை ஏற்கவோ அல்லது வேறு கட்டணத்தை பரிந்துரைக்கவோ, குழு உத்தரவிடும். இந்த கட்டணம், மூன்று ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். தற்போது, உத்தேசித்துள்ள கல்வி கட்டண விபரங்களை சமர்ப்பிக்கும்படி, கல்லுாரிகளுக்கு தனித்தனியாக கடிதம் அனுப்பப் பட்டு வருகிறது. 

எந்த வழிமுறைகளும், நடைமுறையும் இல்லாமல், அரசு நியமித்த குழுவால், நியாயமான கட்டணத்தை முடிவு செய்ய முடியாது.கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க, எந்த நடைமுறையை, வழிமுறையை பின்பற்ற வேண்டும் என்பது, அரசு உத்தரவில் குறிப்பிடப்படவில்லை. கட்டணத்தை வகுக்க, கல்லுாரிகள், எந்த அம்சங்களை கடைப்பிடிக்க வேண்டும்; எதன் அடிப்படையில், குழு முடிவெடுக்க வேண்டும் என்பதும் தெரிவிக்கப்படவில்லை.விசாரணைதனியார் கல்லுாரிகளுக்கு, எந்த பாதுகாப்பு அம்சங்களும் இல்லை. குழு நிர்ணயித்த கட்டணத்தை எதிர்த்து, மேல்முறையீடு செய்ய வழி இல்லை. இது, கல்லுாரிகளின் உரிமையை பாதிக்கிறது. அரசு உத்தரவு, தெளிவற்றதாக உள்ளது. 

இதனால், கட்டணம் நிர்ணயம் செய்வதில், குழப்பங்கள் ஏற்படலாம். அது, கல்லுாரிகளின் நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.எனவே, உயர் கல்வித்துறை உத்தரவை, ரத்து செய்ய வேண்டும். விசாரணை முடியும் வரை, அரசு உத்தரவுக்கு, தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இதேபோன்று, கோவையைச் சேர்ந்த, தனியார் கல்லுாரிகள் நிர்வாக சங்கமும், மனு தாக்கல் செய்துள்ளது. 

இம்மனுக்கள், நீதிபதி, டி.ராஜா முன், விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர், ஜி.சங்கரன் ஆஜரானார். மனுவுக்கு பதில் அளிக்கும்படி, உயர் கல்வித்துறை செயலர், பல்கலை மானிய குழு, கல்லுாரி கல்வி இயக்குனர் மற்றும், கட்டண நிர்ணய குழுவுக்கு, நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை, வரும், ௩௧க்கு தள்ளிவைத்தார்.

Job Opportunity for SAUDI ARABIA


Job Opportunity for SAUDI ARABIA | Walk-in to Submit CV | 22nd To 30th January, 2019 |

Tuesday, January 22, 2019

10ம் வகுப்பு பொது தேர்வு: தத்கல் பதிவு அறிவிப்பு

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு, தத்கல் திட்டத்தில், நாளையும், நாளை மறுநாளும் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு, ஜன., 7 முதல், 19 வரை, ஆன்லைனில் விண்ணப்பிக்க தவறிய தனி தேர்வர்கள், தத்கல் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். 

இதற்கான பதிவு, நாளையும், நாளை மறுநாளும், தேர்வுத்துறை சேவை மையங்களில் மேற்கொள்ளப்படும்.சேவை மையங்களுக்கு, நேரில் சென்று பதிவு செய்ய வேண்டும். மையங்களின் விபரங்களை, http://www.dge.tn.gov என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

TAMILNADU FOREST GUARD & FOREST GUARD WITH LICENCE RESULT RELEASED

Monday, January 21, 2019

வந்தாச்சு ஸ்மார்ட் அட்டெண்டன்ஸ்! இனி உள்ளேன் ஐயா சொல்ல தேவையில்லை!

          கோவை,:இனி, &'உள்ளேன் ஐயா&' என்ற கோஷவொலி தேவையில்லை. மதியம் &'கட்&' அடிக்கவும் வழியில்லை. மாணவர் முகம், விரல் ரேகை பதிவுடன், &'ஸ்மார்ட் அட்டெண்டன்ஸ்&' திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, ஒத்தக்கால்மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளி. ஒரு நிமிடத்தில், 30 பேரின் வருகைப்பதிவை உறுதிசெய்யும் இத்திட்டம், மாவட்டத்தில் முதன்முறையாக, இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் முயற்சியால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

   பள்ளிக்கல்வித்துறை அனைத்து பணிகளையும் டிஜிட்டல்மயமாக்க, அனைத்து மாவட்ட அரசு, அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கும், தலா இரு பயோமெட்ரிக் கருவிகள், விநியோகிக்கப்பட்டுள்ளன.இதை பொருத்தி, விரல் ரேகை பதிவு மூலம், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்களின் வருகைப்பதிவு உறுதி செய்யப்படுகிறது. 

    பள்ளி நேரத்தில் சில ஆசிரியர்கள், சொந்த பணிகள் மேற்கொள்ள, வெளியிடங்களுக்கு செல்வதாக எழும் புகார்களுக்கு, இதன் வாயிலாக முற்றுப்புள்ளி வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில் முதல் முறை கல்வித்துறை இத்திட்டத்தை முன்னெடுக்கும் முன்பே, கோவை, அசோகபுரம் மாதிரி பள்ளி மற்றும் ஒத்தக்கால்மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில், ஆசிரியர்களுக்கான பயோமெட்ரிக் வருகைப்பதிவுக்கான, ஸ்மார்ட் அட்டெண்டன்ஸ் கருவி, இம்மாத துவக்கத்தில் பொருத்தப்பட்டது.

     கோவை மாவட்டத்தில், இம்முன்னோடி திட்டம் இப்பள்ளியில் தான் முதன்முறையாக துவங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.ஒரு நிமிடத்தில் &'ஓகே&'சுமார் இரு வினாடிகளுக்கு ஒருவர் வீதம், ஒரு நிமிடத்தில், 30 மாணவர்களின் முகம் மற்றும் விரல்ரேகை ஆகிய பதிவுகளை &'டிக்&' செய்து, வருகையை உறுதி செய்கிறது.காலை 9:00 மணிக்குள் ஒருமுறை, மதியம் 1:20க்குள் ஒருமுறை, என இரு முறை வருகைப்பதிவு மேற்கொள்ளப்படுகிறது.

         அதிகபட்சம் 15 நிமிடங்களில், மாணவர்களின் வருகைப்பதிவு பணிகள் முடிந்துவிடும்.அடுத்த சில வினாடிகளில், இக்கருவியுடன் பொருத்தப்பட்ட கம்ப்யூட்டரில், வருகை புரிந்தோர், பள்ளிக்கு வராதோர் பட்டியல் தயாராகி விடுகிறது.பள்ளிக்கு வராத மாணவருக்கு வருகைப்பதிவு மாற்றுவது, மதிய இடைவேளைக்குப் பின், மட்டம் போடுவது உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு, இத்திட்டத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைக்கலாம்.மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள், எந்நேரத்திலும் பள்ளி வருகைப்பதிவை ஆய்வு செய்யவும் இதில் வசதி உள்ளதாக, பள்ளியின் தலைமை ஆசிரியர் ரமேஷ் தெரிவித்தார்.

   முன்னாள் மாணவர்களின் முயற்சிதலைமை ஆசிரியர் ரமேஷ் கூறியதாவது:பள்ளி பொன்விழா ஒட்டி, 1982ல் படித்த முன்னாள் மாணவர்கள் உதவியோடு, கிட்டத்தட்ட, 1.75 லட்சம் ரூபாய் செலவில், இரு கம்ப்யூட்டர் இணைப்புடன், ஐந்து பயோமெட்ரிக் கருவிகள், பொருத்தியுள்ளோம்.இதோடு, அனைத்து பள்ளிகளிலும் ஸ்பீக்கர் பொருத்தப்பட்டுள்ளது. எந்த அறிவிப்பையும், தலைமையாசிரியர் அறையில் இருந்து தெரிவிக்கலாம். முன்னாள் மாணவர்கள், பெற்றோர் முயற்சியால் மட்டுமே இத்திட்டம் சாத்தியமானது. அரசுப்பள்ளிகளில் மாணவர் வருகைப்பதிவை துல்லியமாக அறிய, இத்திட்டம் பெரிதும் கைக்கொடுக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.