திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Sunday, April 8, 2018

காமன்வெல்த் பளு தூக்குதலில் இந்தியாவின் பூனம் யாதவ் தங்க பதக்கம் வென்றார்

காமன்வெல்த் பளு தூக்குதல் போட்டியின் மகளிர் பிரிவில் இந்தியாவின் பூனம் யாதவ் தங்க பதக்கம் வென்றுள்ளார்.காமன்வெல்த் பளு தூக்குதலில் இந்தியாவின் பூனம் யாதவ் தங்க பதக்கம் வென்றார்


கோல்டு கோஸ்ட்,

21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது.  இதில், ஆடவருக்கான 77 கிலோ எடைப்பிரிவு பளு தூக்குதல் போட்டியில் தமிழக வீரர் சதீஷ் குமார் சிவலிங்கம் நேற்று தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இவர் மொத்தம் 317 கிலோ எடையை தூக்கி முதலிடம் பிடித்தார்.

இதேபோன்று ஆடவருக்கான 85 கிலோ பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவின் வெங்கட் ராகுல் ரகாலா தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.  இதனால் இந்தியாவின் தங்க பதக்க எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில், காமன்வெல்த் பளு தூக்குதல் போட்டியின் மகளிர் பிரிவில் 69 கிலே எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை பூனம் யாதவ் இன்று தங்க பதக்கம் வென்றுள்ளார்.

No comments:

Post a Comment