பி.இ., பி.டெக். படிப்புகளுக்கு நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
பி.இ. சேர்க்கையை போன்றே நேரடி இரண்டாமாண்டு பி.இ. மாணவர் சேர்க்கைக்கும் இணையதளம் வழியாகவே விண்ணப்பிக்க வேண்டுமென தனது அறிவிப்பில் அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து மாநில அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு விவரம்:-
தகுதிவாய்ந்த பட்டயப் படிப்பில் தேர்ச்சி பெற்ற டிப்ளமோ மற்றும் பி.எஸ்.சி. பட்டப் படிப்பு முடித்த மாணவர்கள் நேரடி இரண்டாமாண்டு பி.இ. படிப்புக்கு விண்ணப்பிக்கத் தகுதி படைத்தவர்கள். தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் சேர்க்கை பெற விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பங்கள் அனைத்தும் இணையதளம் மூலமாக மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்.
இரண்டாமாண்டு பொறியியல் படிப்புக்கு, விண்ணப்பிக்க மூன்று இணையதளங்கள் CLICK HERE FOR MORE INFO...அளிக்கப்பட்டுள்ளன. ஆன்-லைன் மூலமாக விண்ணப்பிப்பதற்கு, விண்ணப்பதாரர் தேவையான சான்றுகளுடன் நேரடியாக ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்-லைன் மூலமாக விண்ணப்பித்த பிறகு அதை பிரதி எடுத்து உரிய ஆவணங்கள் மற்றும் பதிவுக் கட்டணத்துடன் அனுப்பி வைக்க வேண்டும்.
மே 18-இல் தொடக்கம்: இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் நடைமுறைகள் மே 18-இல் தொடங்கும். ஜூன் 14-இல் பதிவு நடைமுறைகள் நிறைவடையும். விண்ணப்பதாரர்கள் ரூ.300-க்கான வரைவோலையை "The secretary, Second year B.E., B.Tech Degree Admissions- 2018-19, ACGCET, Karaikudi" payable at Karaikudi' 2018-19, என்ற பெயரில் பெற்று பதிவுக் கட்டணமாக விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். பதிவுக் கட்டணமின்றி செலுத்தப்படும் விண்ணப்பங்கள் காரணமின்றி நிராகரிக்கப்படும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின மாணவர்களுக்கு பதிவுக் கட்டணம் இல்லை. அதேசமயம், விண்ணப்பதாரர்கள் சுய சான்றொப்பமிட்ட ஜாதிச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை, ''செயலாளர், நேரடி இரண்டாமாண்டு பி.இ.-பி.டெக்., சேர்க்கை, அழகப்பா செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, காரைக்குடி-630 004'' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
No comments:
Post a Comment