சமீபத்தில் புதிய டொமைன் (wa.me) ஒன்றை ரிஜிஸ்டர் செய்து, ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ்ஆப் செயலியை திறக்காமலேயே மெசேஜ் செய்யும் திறனை, வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிவித்தது. அதனைதொடர்ந்து அதே நாளின் மாலையில் பிப் மோட் எனப்படும் பிக்சர்-இன்-பிக்சர் எனும் புதிய அம்சம் ஒன்றை அறிவித்தது.
இந்த இரண்டு சமீபத்திய அம்சங்களை தொடர்ந்து, வாட்ஸ்ஆப்பின் மிகவும் எரிச்சலூட்டும் பிரச்சினை ஒன்றை தீர்க்கும் முனைப்பின் கீழ், புத்தம் புதிய அம்சம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூறப்படும் அந்த எரிச்சலூட்டும் பிரச்சினை என்ன.? அதை தீர்க்கும் புதிய அம்சம் தான் என்ன.?
அனைவருக்குமே பிடிக்காத ஒரு விடயம்.!
கிட்டதட்ட வாட்ஸ்ஆப்பில் உள்ள அனைவருக்குமே பிடிக்காத ஒரு விடயம் என்னவென்று தெரியுமா.? - ஒரு வாட்ஸ்ஆப் க்ரூப்பின் தொடர்ச்சியான மெசேஜ் நோட்டிபிகேஷன் தான். ஸ்மார்ட்போனில் வேறு வேலைகளை பார்க்க முடியாத அளவிற்கு, (குறிப்பாக வீடியோ ஸ்ட்ரீமிங் செய்யும் போது) கடுப்பை கிளப்பும் அந்த க்ரூப் நோட்டிபிகேஷன்களுக்கு, தற்போது ஒரு முடிவு கட்டப்பட்டுள்ளது.
அப்படி என்ன கட்டுப்பாடுகள்.?
எவரையும் எரிச்சலூட்டக்கூடியதாக இருக்கும், வாட்சஆப் க்ரூப் நோட்டிபிகேஷன்களை கட்டுப்படுத்த உருட்டப்பட்டுள்ள அம்சம் தான் - ரெஸ்ட்ரிக்ட் க்ரூப் (Restrict Group) அம்சம். கடந்த சில வாரங்களாகேவ பேசப்பட்ட, இந்த அம்சமானது அட்மின்களுக்கே உரிய கூடுதல் கட்டுப்பாட்டை வழங்குகிறது. அப்படி என்ன கட்டுப்பாடுகள்.?
மெசேஜை படிக்க முடியும், ஆனால், ரிப்ளை செய்ய முடியாது.!
வாட்ஸ்ஆப்பீட்டாஇன்ஃபோ (WABetaInfo) தளம் கொடுத்துள்ள விளக்கத்தின் படி, கூறப்படும், ரெஸ்ட்ரிக்ட் க்ரூப் டூல் ஆனது, க்ரூப் அட்மின்களை மட்டுமே மெசேஜ் செய்ய அனுமதிக்கும். அதாவது, க்ரூப்பின் இதர மெம்பர்களால், அட்மினின் மெசேஜை படிக்க முடியும், ஆனால், ரிப்ளை செய்ய முடியாது. யாரேனும், க்ரூப்பில் மெசேஜ் செய்ய விரும்பினால், அவர்கள் அட்மினை தொடர்பு கொள்ள வேண்டும்.
வாட்ஸ்ஆப் 2.18.210 வெர்ஷனில் காணப்பபட்டுள்ளன.!
இந்த புதிய ரெஸ்ட்ரிக்ட் க்ரூப் அம்சமானது, எப்போது எந்தெந்த தளங்களில் உருட்டப்படும் என்பது பற்றிய வார்த்தைபால் இல்லை. ஆனால், நிச்சயமாக நீண்ட காலம் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. வரப்போகும் இந்த அப்டேட் உடன், வாட்ஸ்ஆப் ஸ்டிக்கர்ஸ் உட்பட பல பிரபலமான அம்சங்கள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அவைகள், கோவூகுள் பிளே பீட்டா பதிப்பான, வாட்ஸ்ஆப் 2.18.210 வெர்ஷனில் காணப்பபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னர் வெளியான பிப் மோட் பற்றி.?
பிப் மோட் எனும் புதிய மேம்படுத்தல் ஆனது, தற்போது வரையிலாக ஐபோன் பயனர்களுக்கு மட்டுமே உருட்டப்பட்டுள்ளது. எனினும் கூடிய விரைவில் ஆண்ட்ராய்டு தளத்தையும் எட்டும் என்பதில் சந்தேகம் வேண்டாம். ஏனெனில் வாட்ஸ்ஆப் நிறுவனம் ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் என எந்த பாரபட்சமும் பார்ப்பதில்லை.
வெளியாகியுள்ள பிப் மோட் எனப்படும் அம்சத்தின் நன்மை என்ன.?
பிப் என்பது பிக்சர்-இன்-பிக்சர் (Picture-in-Picture) என்பதின் சுருக்கமாகும். சில மாதங்களுக்கு முன் பரிசோதனை தளத்தில் காணப்பட்ட இந்த பிக்சர்-இன்-பிக்சர் மோட் ஆனது, இறுதியாக ஐஓஎஸ் தளத்தின் வாட்ஸ்ஆப் அப்டேட்டில் உருட்டப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சம் ஆனது, வாட்ஸ்ஆப்பில் இருந்தபடியே, அதாவது வாட்ஸ்ஆப்பை விட்டு வெளியேறாமலேயே பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்களை அணுகும் ஆதரவை வழங்கும்.
அதெப்படி சாத்தியம்.?
அதாவது, வாட்ஸ்ஆப் சாட் வழியாக, பகிரப்படும் பேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராம் இணைப்புகளை வாட்ஸ்ஆப்பில் இருந்தபடியே பிளே செய்யலாம் அல்லது திறக்கலாம் அல்லது அணுகலாம். அதுமட்டுமின்றி பிளே ஆகி கொண்டிருக்கும் வீடியோவை பார்த்துக்கொண்டே (க்ளோஸ் செய்யாமலேயே) மற்றொரு வாட்ஸ்ஆப் சாட்டிற்கு செல்வது மட்டுமின்றி, வழக்கம் போல மெசேஜ்களை பரிமாறிக்கொள்ள முடியும்.
ஆண்ட்ராய்டில் எப்போது கிடைக்கும்.?
வாட்ஸ்ஆப்பின் ஐஓஎஸ் பதிப்பின் மிக முக்கியமான அம்சமாக பார்க்கப்படும் பிப் மோட் ஆனது கூடிய விரைவில் ஆண்ட்ராய்டு தளத்திலும் உருட்டப்படும் என்று எதிர்பார்க்கலாம். அடு சார்ந்த தகவலை உடனுக்குடன் அறிந்து கொள்ள தமிழ் கிஸ்பாட் தளத்தின் ஆப்ஸ் பிரிவுடன் இணைந்திருக்கவும். இதற்கிடையில் வருகிற மே 25 ஆம் தேதி அன்று, வாட்ஸ்ஆப்பில் சில பொது தரவு பாதுகாப்பு ஒழுங்குமுறைகளும் (General Data Protection Regulation - GDPR) நிகழவுள்ளன. நிகழும் ஒழுங்குமுறையின் கீழ், வாட்ஸ்ஆப்பில் இணையும் பயனர்களுக்கு, குறைந்தபட்சம் 16 வயது இருக்க வேண்டும் என்கிற கட்டுப்பாடு ஏற்படுத்தப்படும்.
புதிய டொமைன்.!
முன்னதாக, பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்ஆப் பயன்பாடு ஆனது 'wa.me' என்கிற ஒரு புதிய டொமைன் பெயரின் கீழ் பதிவு ஆகியிருப்பதை வெளிப்படுத்தியது. வாட்ஸ்ஆப்பீட்டாஇன்ஃபோ (WAbeta Info) வழியாக வெளியான அறிக்கையின்படி, api.whatsapp.com எனும் ஒரு குறுகிய டொமைன் வழியாக, மிக விரைவில் வாட்ஸ்ஆப் செயலியை திறக்க பயன்படுத்தப்படலாம்.
இது எப்படி வேலை செய்யும்.?
ஆண்ட்ராய்டு வெர்ஷன் 2.18.138-ல் கிடைக்கும் இந்த அப்டேட்டின் பயன் என்னவென்று கேட்டால் : குறிப்பிட்ட நபருக்கு மெசேஜ் செய்ய விரும்பும் பயனர்கள், https://wa.me/ என்கிற டொமைனை டைப் செய்தும் அதனுடன் மொபைல் எண்ணை இணைக்கவும். இதை நிகழ்த்த அவர்கள் தானாக குறிப்பிட்ட வாட்ஸ்ஆப் சாட்டிற்கு அனுப்பப்படுவார்கள். உதாரணமாக உங்கள் நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களின் தொலைபேசி எண் +91-9876543210 எனில் https://wa.me/919876543210 என டைப் செய்ய வேண்டும்.
வாட்ஸ்ஆப் செயலியை திறக்காமலேயே.!
ஒருவேளை, குறிப்பிட்ட டொமைன் உடன் தவறான வாட்ஸ்ஆப் நம்பரை டைப் செய்து சாட்டை திறக்க முயற்சித்தால், இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப் ஆனது, யூஆர்எல் வழியாக பகிரப்பட்ட தொலைபேசி எண் தவறானது என உங்களுக்கு அறிவிக்கும். இதன் அர்த்தம், நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ்ஆப் செயலியை திறக்காமலேயே, குறிப்பிட்ட நபர்களுக்கு வாட்ஸ்ஆப் செய்ய முடியும் என்று அர்த்தம். இந்த இடத்தில் உங்களுக்கு சரியான தொலைபேசி எண்கள் நினைவில் இருக்க வேண்டும் என்பதை மனதிற்கொள்ளவும்.
No comments:
Post a Comment